பவன் கல்யாண் நடித்துள்ள "ஓஜி" திரைப்படம் வரும் 23-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. பவன் கல்யாண் நடித்ததிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.