Also Watch
Read this
Posted on: Oct 21, 2025 09:06 AM
By: Web Team

பழம்பெரும் இந்தி நடிகர் கோவர்தன் அஸ்ரானி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 84-ஆவது வயதில் காலாமானார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இவர், இந்தியில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்த அஸ்ரானி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவர்தன் அஸ்ரானி மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved