வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் கல்யாணி பிரியதர்ஷன் கடைசியாக நடித்து வெளியான லோகா திரைப்படம் 255 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.இந்நிலையில், ஹீரோ படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.