இயக்குநர் அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளார். சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’. திரைப்படம் விர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், வரும் 31-ந் தேதி அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடைபெற உள்ளது.