Also Watch
Read this
By: Web Team

நடிகர் ஸ்ரீ நலமாக உள்ளதாகவும், அவர் எழுதிய புத்தகத்தை வெளியிட போவது குறித்து தன்னிடம் வீடியோ காலில் தெரிவித்து வருவதாகவும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஸ்ரீயை தாமும் எஸ்.ஆர். பிரபும் சரியாக கவனிக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக தாம் சமூக வலைதளங்களில் இருந்து விலகியதாக குறிப்பிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தின் இரண்டு கதாநாயகர்களில் ஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.