அண்ணாமலை படம் போட்டு ஆடு வெட்டிய விவகாரம்.. 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு என காவல்துறை விளக்கம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்தை போட்டு ஆடு வெட்டிய விவகாரம் தொடர்பாக 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
Screenshot 2024-08-21 072226
Screenshot 2024-08-21 072226
Published on: 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்தை போட்டு ஆடு வெட்டிய விவகாரம் தொடர்பாக 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கமளித்துள்ளது. மக்களவை தேர்தலில் அண்ணாமலை தோல்வியடைந்ததை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரியில் ஆட்டின் தலை வெட்டி கொண்டாடப்பட்ட வீடியோ இணையத்தில் பரவியது. இது தொடர்பாக பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்றபொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பாரத், ஆசைத்தம்பி, ராமன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.