இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என தகவல்.. அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை மேற்கொள்ள அறிவுரை

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Screenshot 2024-08-21 075334
Screenshot 2024-08-21 075334
Published on: 

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குரங்கம்மை பாதிப்புகள் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக காய்ச்சல், உடலில் சிறு கொப்பளங்கள், தலைவலி, தசைபிடிப்பு,
உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.