கன்னி உங்கள் ராசிக்கு சமசஸ்தமான ஏழாம் வீட்டில் சனி , ஆறில் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும் ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது, அடைய வேண்டிய இலக்கை அடைய ஒரு தைரியமானது உங்களுக்கு கிடைக்கும். சனி ஏழில் சஞ்சரிப்பதால் கணவன் மனவியிடைய சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பணம் வரவுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. ஒரு சில நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய ஒரு அதிஷ்டமானது உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு தொழில்ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய பத்தாம் வீட்டில் 14.05.2025 முதல் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பத்தில் குரு என்பதால் தொழில், வியாபாரத்தில் பொறுமையோடு செயல்பட வேண்டும். தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் விரைவில் ஒரு நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய ஒரு வாய்ப்பானது உங்களுக்கு உண்டு. உதியோகரீதியாக பார்க்கின்ற பொழுது, நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு யோகம் உங்களுக்கு இருக்கிறது என்றாலும் வேலைப் பளு சற்று கூடுதலாக இருக்கும். அடுத்துக் குறிப்பாக நீங்கள் சற்று பொறுமையோடு நிதானத்தோடு செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்பானது உங்களுக்கு உண்டு. குறிப்பாக பத்தில் செய்திருக்கக்கூடிய குருபகவான் 18.10.2025 முதல் 5.12.2025 வரை லாபஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும். அதன் பிறகு 11.03.2025 வரை குருபகவான் வக்கர கதியில் சஞ்சாரம் செய்ய இருக்கக கூடிய காலமும் உங்களுக்கு ஒரு அனுகுளமான காலம் என்பதால் அக்டோபர் நவம்பருக்கு பிறகு உங்கள் வாழ்வில் வளமான பலன்கள் ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு. நீங்கள் சற்று பொறுமையோடு செய்யல்பட்டால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. ஆடம்பரச் செலவங்களை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிக மிக நல்லது. இந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் தஷ்ணாமூர்த்தி வடிவாடு மேற்கொள்வது உடல் ஊணமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைக் செய்வதன் மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்பானது ஏற்படும்.