ரிஷபம்உங்கள் ராசிக்கு லாபஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 11ம் வீட்டில் சனி பகவான் வளுவாக சஞ்சரிப்பதும், திருக்கணித சித்தாந்தப்படி 14.5.2025 முதல் தனஸ்தானமான 2ம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும்.மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைக்கூடும். பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிட ஒற்றுமையானது திருப்திகரமாக இருக்கும் ஒரு நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது.அசையும் அசையாசொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். தொழில் வியாபாரத்திற்காக கடந்த காலங்களில் உங்களைத் இருந்து வந்த தேக்க நிலை தற்போது விலகி, ஒரு லாபத்தை ஈட்ட கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு வழக்குகள் விலகி, மன அமைதி ஏற்படும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதர உதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல், அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்க கூடிய உதவிகள் கூட வருகின்ற நாட்களில் உங்களுக்கு கிடைக்கும்.வேலைக்குச் செல்வவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல், உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக் கூட ஒரு வாய்ப்புகள் உள்ளன. ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து, மனைவி, பிள்ளைகள் இருக்குக்குடிய இடத்திற்கு இடமாறி, குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழக்குடிய ஒரு நிலையானது வரும் நாட்களில் உண்டு.இந்த ஆண்டில் உங்கள் ராசிக்கு மே பதினெட்டு முதல் நான்காம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பது, சின்னச் சின்ன அலைச்சலை கொடுத்தாலும், சனி , குரு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால், பண வரவுகள் மிக மிக தாராளமாக இருந்து, அனைத்து விதமான செல்வத்தையும் நீங்கள் அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.பிள்ளைகள் வழியில் அனுகுளமான பலன்கள் ஏற்படும். பூர்விகச் சொத்துவகையில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையக்குடிய ஒரு வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு.கடந்த கால கடன்கள் குறைந்து மன அமைதி ஏற்படக்குடிய ஒரு வாய்ப்பானது உங்களுக்கு வரும் நாட்களில் உண்டு. இந்த ஆண்டில் ஒரு வளமான பலன்களை நீங்கள் அடைவதற்கு , அம்மன் வழிபாடு, துர்கை வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, ராவு கால நேரத்தில் அம்மனுக்கு குங்குமத்தால் அச்சனை செய்வதன் மூலமாக ஒரு வளமான பலன்களைஅடையக்கூடிய ஒரு வாய்ப்பானது உங்களுக்கு உண்டு.