கும்பம்ஜென்மராசியில் ராகு, ஏழில் கேது என 18.5.2025 முதல் ராகு கேது சஞ்சாரம் செய்ய இருப்பதும் , உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்வதும், நிதானத்தோடு செயல்பட வேண்டிய அமைப்பு என்றாலும். பொதுவாக ஒன்று ஏழில் ராகுக்கு எது இரண்டில் சனி சஞ்சரிப்பதால் , கணவன் மனைவியிடைய சிறு சிறு ஒற்றுமை குறைவுகள், முன்கோபத்தால் சின்ன சின்ன பிரச்சினைகள் என்றாலும்.உங்கள் ராசிக்கு இரண்டு பதினொன்றுக்கு அதிபதியான குருபகவான் பஞ்சமஸ்தானமான ஐந்தாம் விட்டில் 14.5.2025 முதல் சஞ்சாரம் செய்யிருப்பது அற்புதமான அமைப்பாகும். ஏழரை சனி நடைபெற்றாலும் , ஐந்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.கடந்தகால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.தொழில் வியாபார ரீதியாக நல்ல லாபத்தை ஈட்ட கூடிய ஒரு அதிஷ்டமானது உங்களுக்கு உண்டு.உதியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று குறைந்து ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும்.பொதுவாக பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. எதிலும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது மிக நல்லது.பொதுவாக சனி பகவான் ஒரு நீதி கிரகமாகும். நம் நேர்மையாக செய்யல்பட்டால் எந்த விதத்திலும் கெடுதிகள் ஏற்படாது. நேர்மையாகவும் நானயமாகவும் செய்யல்பட்டால், ஏழரை சனி நடைபெற்றாலும் எதையும் சமாளித்து ஒரு வளமான பலன்களை அடைய கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.சனி இரண்டில் இருப்பதால் சிந்தித்து பேசுவதன் மூலமாக ஒரு வளமான பலன்களை அடைய கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு . இந்த ஆண்டில் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடிய அமைப்பும் ஒரு சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்றடுக்குடிய ஒரு அதிஷ்டங்களும் கண்டிப்பாக ஏற்படும். இந்த ஆண்டில் ஒரு வளமான பலங்களை நீங்கள் அடைவதற்கு அம்மன் வழிபாடு, துர்கை வழிபாடு மேற்கொள்வது குறிப்பாக சனி பகவானுக்கு உங்களால் முடிந்த இறை வழிபாடு மேற்கொள்வது ஆஞ்சநேயர் வழிபடு மேற்கோளாவது சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது மூலமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு வளமான பலன்களை அடைய கூடிய வாய்ப்புகள் ஏற்படும்..!