மேஷம்மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த வருடத்தில் பிரதான காலம் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் குரு விரயஸ்தானமான 12ம் வீட்டில் சனிசஞ்சாரம் செய்வதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருக்க வேண்டும். திருக்கணித சித்தாந்தம் படி 14.05.2025 குரு பகவான் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும் சக்திக்கு மீறிய வீண் செலவு ஏற்படும்..!எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் ஏற்றம் மிகுந்த ஒரு பலனை அடையக்கூடிய ஒரு வாய்ப்பு உங்களுக்கு உண்டு..!ராகு பகவான் மே18 முதல் ராகு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்களுக்கு பலம் உண்டாகும்..!தொழில் வியாபார ரீதியாக தற்போது கிடைக்க கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்தி கொண்டால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு..!கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலமாக அடைய வேண்டிய இலக்கை அடையலாம் வேலை ஆட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது...!வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பனியில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்ல வாய்ப்பை பெற முடியும்..!வேலைக்கு செல்பவர்களுக்கு சற்று வேலை பளு கூடுதலாக இருந்தாலும் அதனை பற்றி கவலை படாமல் உங்கள் பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது..!உங்களுக்கு தற்போது ஏழரை நாட்டு சனி நடப்பதால் ஏழரை சனியில் விரய சனி நடப்பதால் தேவையற்ற முறையில் வீண் செலவு ஏற்படலாம்..!ஒரு சிலருக்கு கடன்கள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு அதனால் சிக்கனமாக செயல்படுவது ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளுங்கள்..!எந்த ஒரு விஷயத்திலும் ஞாயம் மற்றும் நேர்மையோடு செயல்படுவது மிக மிக நல்லது சனி ஒரு நீதி கிரகமாகும் விரயஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால்..!ஒரு சிலருக்கு தேவை இல்லாத நெருக்கடி ஏற்படலாம் என்பதால் நாம் நடக்கின்ற பொழுது ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனமாக நடந்தால் நிலைமையை சமாளித்து ஒரு வளமான பலன்களை அடைய முடியும்..! குரு பார்வை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டுக்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூட கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு..!இக்கட்டான நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் உதவியானது உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைய கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு..!இக்கட்டான சூழலில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலமாக இருக்க கூடிய நெருக்கடிகளை சமாளிக்க கூடிய பலம் உண்டாகும்..!இந்த ஆண்டில் வளமான பலன்களை நீங்கள் அடைவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது..!உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது..!