மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி ((Zohran Mamdani)) வெற்றி பெற்றால் நியூயார்க்கிற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் வெளிப்படையாக மிரட்ட்டியிருந்த நிலையில் மம்தானி மேயரானார். நியூயார்க் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மேயர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, டிரம்பின் குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவா ((Curtis Sliwa)) மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோ((Andrew Cuomo )) இடையே மும்முனை போட்டி நிலவியது. கடந்த 25 ஆம் தேதி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில், மம்தானி 111 ஆவது மேயரானார்.