அமெரிக்காவில் தனது செல்ல நாய்க்குட்டியை காப்பாற்ற பெண் ஒருவர் முதலையை எதிர்த்துப் போராடி தனது துணிச்சலை காட்டி உள்ளார். புளோரிடாவின் லேண்ட் ஓ லேக்ஸில் உள்ள அவரது வீட்டின் பின்னால் அந்த பெண் தனது நான்கு மாத டாக்ஸ் என்ற நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்து சென்றபோது, ஏரியிலிருந்த முதலை பாய்ந்து நாயை கவ்வ முயன்றது. அப்போது சிறிதும் பயப்படாத அந்த பெண் வெறும் கைகளால் முதலையின் கண்களை பலமுறை தாக்கி நாயை காப்பற்றினார்.