அமெரிக்காவை முழுமையாக சார்ந்திருப்பதை குறைக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த கனடா விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா உடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இந்திய அமைச்சர்களுடன் கனடா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார். சர்வதேச அளவில் வர்த்தகத்தை அதிகரித்து உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவை சார்ந்திருக்க தேவையில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.