துருக்கியின் இஸ்மிர்(( İzmir)) மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்த நிலையில், பல ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் கருகி சேதமடைந்த ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. காட்டு தீ வேகமாக பரவி வரும் நிலையில், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறை வீரர்கள் தடுமாறியதால், சிறிய ரக விமானங்கள் மூலம் அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வனப்பகுதியையொட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.