போர் நிறுத்தங்கள், ஒப்பந்தங்கள் என எதைச் செய்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என தமது ஏக்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கவிருந்த அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தியதற்காக அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தமது அமெரிக்க பயணத்தின்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் தெரிவித்திருந்தார். இதையே குறிப்பிட்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், தாம் எதை செய்தாலும் நோபல் பரிசு கிடைக்காது என்றும், இருந்தாலும் தமது பணிகள் அனைத்தும் மக்களுக்கு தெரியும் அதுவே போதும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : கூடுதல் தொகுதி வேண்டும் என ஆசை - துரை வைகோ