அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள்தான் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, உலக நாடுகள் மீது வரி விதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். மருந்து பொருட்கள் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டி உள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப், தனக்கு வரிகள் ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.