லண்டனில் இசை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம் என தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் லண்டன் டிராபால்கர் சதுக்கத்தில் நடந்த தீபவாளி கொண்டாட்டத்தில் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவரவர் கலாச்சாரப்படி உடை அணிந்தும் நடனமாடியும் உற்சாகமடைந்தனர். விதவிதமான உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.