அணு ஆயுத சோதனையை தாங்கள் முதலில் தொடங்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. வடகொரியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.