தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில், கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கடந்த 29ம் தேதி, தான்சானியா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான சிசிஎம் கட்சியை சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் ((Samia Suluhu Hassan)) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது. இதனால், அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.