ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை என மத்திய அரசின் உண்மை சரி பார்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் மிட் நைட் ஹேமர் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை நடத்திய போது இந்தியாவின் வானவெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக இணையத்தில் காட்டுத்தீயை போல் செய்தி பரவியது இதனை மறுத்த PIB-ன் உண்மை சரிபார்ப்பு பிரிவு, தாக்குதலுக்காக அமெரிக்கா பயன்படுத்திய வான்வெளியை அந்நாடே கூறியிருப்பதாகவும், இந்திய வான்வெளியை பயன்படுத்தவில்லை எனவும் தெளிவுப்படுத்தியது. இதையும் படியுங்கள் : முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்ட விவகாரம்.