அமெரிக்காவில் வேலைக்கான பெர்மிட் வழங்கும் முறையில் கொண்டுவரப்பட்டுள்ள அதிரடி மாற்றத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்குப் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தின் படி, வேலை பெர்மிட்டுக்கான அங்கீகார ஆவணங்களை தானாக நீட்டிப்பு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் படி இன்றோ அல்லது பிறகோ வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை நீட்டிக்க விண்ணப்பித்தால் அது தானாக நீட்டிக்கப்படாது. இதனால் அமெரிக்காவில் வேலைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவருக்கு அதற்கான உரிமம் வழங்கப்படாது. தற்போது ரினீவல் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அது கிடைக்கும் வரை 540 நாட்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.