ஈரான் தாக்க கூடும் என்ற அச்சத்தில் கத்தாரில் உள்ள தனது விமானப்படை தளத்தில் இருந்து தனது சுமார் 40 போர் விமானங்களை அமெரிக்கா வேறு இடத்திற்கு மாற்றி உள்ளது. ஜூன் 5 மற்றும் 19 ஆம் தேதிக்கு இடையே எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப் படங்களில் இருந்து இது தெரிய வந்துள்ளது. மத்திய கிழக்கில், அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவ தளம் Al Udeid விமானப் படை தளத்தில் உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர் விமானங்கள்,சி-130 ஹெர்குலிஸ் ராணுவ சரக்கு விமானங்கள் ஆகியன வேறு விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதனிடையே Al Udeid விமானப் படைதளத்திற்கு கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த வடகொரியா.. யூத அரசை 'புற்றுநோய்' என்று விமர்சனம்