ரஷ்யாவுடனான போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி சுமார் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இது குறித்து உக்ரைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அபுதாபியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையின் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என உக்ரைன் நம்புகிறது. Related Link இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்