அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் கண் முன்னே மயங்கி விழுந்த ஒருவரால் பரபரப்பு நிலவியது. ஓவல் அலுவகத்தில், உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மருந்து விலைக் குறைப்பு குறித்து நிர்வாகி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, பின்னால் நின்றுகொண்டிருந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் நிர்வாகி கார்டன் பிண்ட்லே என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். நிர்வாகி நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாவும் அவர் நலமுடன் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.