அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை 35வது நாளை எட்டிய நிலையில் ஊதியம் கிடைக்காததால், ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். அடுத்த நிதியாண்டுக்கு தேவையான நிதியை விடுவிப்பதில் நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் நிதி விடுவிப்பு தடைபட்டுள்ளது. இதனால் அரசின் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவை முடங்கியது.