மத்திய வியட்நாமில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 35 பேர் வரை பலியான நிலையில், 60க்கும் மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிய நிலையில், 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.