ரஷ்யாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் புத்திசாலித்தனமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறிப்பாக உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மட்டுமே குறிவைத்து அழித்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு வருடத்திற்கு முன்பே, தான் அங்கீகரித்த தாக்குதல் திட்டம் என குறிப்பிட்டதோடு, தற்போது திருப்தியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.