ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் பகுதிகளில், உக்ரைன் ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்ததன் வீடியோ வெளியாகியது. குண்டுகளை தீ மழை போல் ஆளில்லா விமானங்களை கொண்டு் கார்கிவ் பகுதியில் வீசியதில் அங்குள்ள மரங்கள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்துள்ளன. மேலும், ரஷ்யாவின் சில ராணுவ வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.