போரில் ரஷ்ய கடற்படையின் முக்கியத் தளபதியை உக்ரைன் ராணுவ வீரர்கள் கொன்றனர். உக்ரைன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதியில் ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாட்டு படைகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சண்டை நடைபெற்று வரும் இடத்தை ரஷ்ய கடற்படையின் துணைத் தளபதி மிக்கைல் குட்சேவ் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய கடற்படையின் 155-ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த இவர், கடந்த மார்ச் மாதம்தான் கடற்படையின் துணை தளபதியாக பொறுப்பேற்றார். உக்ரைனுடனான போரில் இதுவரை 10 ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.