உக்ரைன் மீதான போரை ரஷ்ய அதிபர் புதின் நிறுத்துவார் என தாம் கருதவில்லை எனவும் புதின் குறித்து தமக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளையும் தாண்டி நடக்கும் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என நேற்று புதினுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் புதினின் தரப்பில் இருந்து நம்பிக்கை அளிக்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து விடும் என்ற எண்ணத்தில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் குறித்தும் தாம் புதினுடன் நீண்ட நேரம் பேசியதாகவும். ஆனால் உக்ரைன் போர் குறித்து புதின் வாய் மூடி மவுனமாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.