அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட Big Beautiful Bill செலவின குறைப்பு மசோதாவில் அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் 218 க்கு 214 என்ற கணக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 2024 பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி புதிய வரிச்சலுகை வழங்கப்பட்டதாகவும், இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி என்றும் வெள்ளை மாளிகை பெருமிதம் தெரிவித்துள்ளது.