பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை "நம்பமுடியாத நாடு" என்று விமர்சித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடி "சிறந்த மனிதர்" என்றும், அவர் காலத்தின் சோதனையை எதிர்கொண்ட தலைவர் எனவும் புகழாராம் சூட்டினார். ஒரு கட்டத்தில் தன்னைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அவர் தொடர்ந்து தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறிய டிரம்ப், பல வருடங்களாக இந்தியாவை கவனித்து வருகிறேன், அது ஒரு நம்பமுடியாத நாடு என்றார். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைவர் அங்கு மாறிக்கொண்டே இருப்பர் என்றும் ஆனால் தனது நண்பர் மோடி மட்டும் நீண்ட காலமாக இருப்பதாக கூறினார்.