தனக்கு நோபல் பரிசு கிடைக்காதது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியவர், இதுவரை எந்தவொரு அதிபரும் ஒரு போரை நிறுத்தியதை தான் அறியவில்லை என்றும், எட்டு மாதங்களில் எட்டு போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்றார். அடுத்த ஆண்டு நிச்சயம் அது கிடைக்கும் என்ற டிரம்ப், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கூறினார். பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் தனக்கு பிடித்தமானவர்கள் என்ற நிலையிலும், இருவரிடமும் போரை நிறுத்தாவிட்டால், 200 சதவீத வரி வரி விதிப்பேன் என மிரட்டி நிறுத்தியதாக கூறினார்.