அந்த முகமும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன என வெள்ளை மாளிகை ஊடக செயலாளரை அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஊடக செயலாளர் கரோலின் லெவிட் மிகச்சிறந்த பெண்மணி எனவும், அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது எனவும் கூறினார். மேலும் அவரது செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், அந்த முகமும், அந்த மூளையும்,அந்த உதடுகளும் சிறப்பாக செயல்படுகிறது என கூறினார்.