அமெரிக்காவின் புகழ் மிக்க வார இதழான டைம் பத்திரிக்கையை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். காசா அமைதி திட்டம் குறித்த கட்டுரையை கவர் ஸ்டோரியாக டிரம்பின் புகைப்படத்துடன் டைம் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் அவரது தலைமுடி மறைந்து இருப்பது போல் உள்ளது. அதற்கு தன்னைப் பற்றி ஒப்பீட்டளவில் நல்ல கதையை டைம் எழுதியிருந்ததாக கூறிய டிரம்ப் ஆனால் புகைப்படத்தில் தன் தலையின் மேல் ஏதோ கிரீடம் மிதப்பது போல் உள்ளதாகவும் அந்த புகைப்படம் தனது வாழ்நாளிலேயே மிக மோசமான புகைப்படம் என்றார். டைம் பத்திரிகையுடன் டிரம்ப் சண்டையிடுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடதக்கது.