ஈரான்-இஸ்ரேல் போரால் ஏற்பட்டுள்ள பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இந்திய பங்கு சந்தைகளில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் துவங்கியது. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து 82 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகத்தை துவக்கியது. அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 200 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. ஜியோ நிதிச் சேவைகள்,அதானி என்டர்பிரைசஸ், எஸ்பிஐ உள்ளிட்டவற்றின் பங்கு விலைகள் உயர்ந்தன. ONGC, ஹீரோ மோட்டார்கார்ப், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவை சந்தித்தன.இதையும் படியுங்கள் : சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகளின் முதலீடு பணம்..