அமெரிக்கா பொருட்கள் மீதான வரி விதிப்பை முற்றிலுமாக ரத்து செய்ய இந்தியா முன்வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது பற்றி ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் அமெரிக்க பொருட்களை விற்கவே முடியாத அளவுக்கு வரிகள் இருப்பதாகவும், இது ஒற்றை சார்பு பேரழிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிக பொருட்களை தங்கள் நாட்டில் விற்பனை செய்துவிட்டு, எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடம் வாங்குவதாக ஆதங்கம் தெரிவித்திருக்கும் டிரம்ப், தற்போது வரியை குறைக்க இந்தியா முன் வந்திருந்தாலும், மிகவும் தாமதமாகி விட்டதாக பதிவிட்டுள்ளார்.