மிகக்குறைந்த வரி விதிப்புடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூலை 9-ஆம் தேதியுடன் 90 நாட்கள் வரி நிறுத்தம் முடிவடைவதால், ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்தன. இந்த சூழலில், இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும், அது அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுவதற்கு ஏற்ற ஒப்பந்தமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மிகக் குறைந்த வரிகளைக் கொண்ட அந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவும் இந்தியாவில் பொருட்களை விற்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.