வியட்நாமில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஹனோயில் இருந்து கலாங் வளைகுடா பகுதிக்கு சென்றபோது, படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து சென்ற மீட்புப் படையினர், 11 பேரை உயிருடன் மீட்டு, மாயமான 8 பேரை தேடி வருகின்றனர்..