அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே 6 கோடி பேருக்கு மேல் வாக்களித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி, வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை முன்னதாகவே செலுத்த முடியும். அதன்படி, வாக்களிக்க தகுதியான 24 கோடி பேரில், சுமார் 6 கோடியே 80 லட்சம் பேர், தபால் வாக்குகள் அல்லது தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் மூலம் வாக்களித்துள்ளனர்.