விசா காலாவதியானதால் பிரபல TikToker Khaby Lame அமெரிக்காவிலிருந்து வெளியேறினார். TikTok க்கில் 162 மில்லியனுக்கும் அதிகமான followers கொண்டவரான 25 வயதான Khaby Lame கடந்த ஏப்ரலில் அமெரிக்காவிற்கு சென்றார். விசா காலம் முடிந்தும் Lame அமெரிக்காவிலேயே தங்கியிருந்த நிலையில் லாஸ் வேகாஸில் அவர் குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நாடு கடத்தல் இன்றி தானாக வெளியேற அமெரிக்க குடியேற்றத்துறை அனுமதி வழங்கியதையடுத்து அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். இது அவர் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குத் திரும்புவதை பாதுகாக்க உதவும் ஒரு நடவடிக்கை என கூறப்படுகிறது.