ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் தடை ஏதுமில்லை என்று, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்தார். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக, இந்தியாவிடம் அத்தகைய நபர்களை ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். இந்த விவகாரத்தில், இந்தியாவிடமிருந்து ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் ஆதரவு தேவை என்ற பிலாவல் பூட்டோ, அசார் ஆப்கானிஸ்தானில் மறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.