தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஒரே ஆண்டில் ஏழாவது முறையாக வெடித்துச் சிதறியது. இரவு நேரத்தில் வெடித்துச் சிதறிய எரிமலையினால் வானுயரத்திற்கு கரும்புகை எழுந்தது.இதன் தாக்கம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை இருந்ததாகவும், இந்த எரிமலை வெடிப்பால் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிமலை வெடிப்புகளால் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதாகவும், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.