அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர். ஹமாஸால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை திருப்பி அனுப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஸ்ப்ரே பாட்டில்களுடன் வந்த நபர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வெடிகுண்டு போன்ற பொருளை வீசிவிட்டு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார்.