20 கார்களை கயிறு கட்டி 10 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்று, எகிப்து நாட்டின் மல்யுத்த வீரர் அஷ்ரஃப் கபோங்கா புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 44 வயதான இவர், இதுவரை ஏழு முறை கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். பற்களால் கனமான ரயிலை இழுத்தது, அதி கனமான ரயில் இஞ்சினை இழுத்தது, 30 வினாடிகளில் அதிக முட்டையை உடைத்து சாப்பிட்டது ஆகிய சாதனைகளை அவர், படைத்துள்ளார்.