அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு நானே போப்பாக இருக்க விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப்பாண்டவர் போல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். போப்பாண்டவர் உடையில் இருப்பது போல் AI-உருவாக்கிய படத்தைப் டிரம்ப் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த நிலையில், அவர் போப் பிரான்சிஸின் மரணத்தை கேலி செய்வதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.