ஸ்பெயின் நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணி லெதிசியா மீது மக்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மழை பாதிப்புகளை ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டறிவதற்காக, மன்னர், ராணி, பிரதமர் Pedro Sánchez மற்றும் அதிகாரிகள் சென்ற நிலையில், மக்கள் திடீரென கொதித்தெழுந்து சேற்றை வீசியெறிந்தனர். அத்தோடு, மக்களை கொல்லும் கொலைகாரர்கள் என்றும் அவர்கள் ஆவேசமாக கோஷமிட்டனர்.