நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து அதிபர் டிரம்ப் என கனடா பிரதமர் மார்க் கார்னே காட்டமாக விமர்சித்துள்ளார். அதிபராக பதவியேற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் கனடா, சீனா நாடுகளுக்கு கண்மூடித்தனமாக வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.