பெரு நாட்டில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர் நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. லிமா நகரில் அதிகாலை ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து நபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த போது, அவ்வழியாக ரயில் வந்தது. ரயில் அருகில் வந்த பிறகு, அந்நபர் தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க முயன்ற போது, அவர் மீது ரயில் உரசியது. தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.